விட்டா ஆளையே தூக்கிரும் போலயே.. ஓவென இரைச்சலுடன் ஆர்ப்பரிக்கும் கடல்! பயத்துடன் பாம்பன் வாசிகள்!
ராமநாதபுரம்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால், பாம்பன் சாலை பாலம், ரயில் பாலம் பனியால் சூழ்ந்துள்ளது. மேலும், பாம்பன் கடல் சீற்றமாக காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு கணித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம் தீவை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இன்று கன மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாம்பன் பாலத்தில் பனிமூட்டமாக காணப்பட்டு கடற்கரையில் கடல் சீற்றமாகவும் காற்றும் அதிகமாகவும் தற்போது காணப்படுகிறது. இதனால் பாம்பன் சாலை பாலத்தில் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை ஒளிருபட்டவாறு ஒருவித பயத்துடனும் அச்சத்துடனும் தற்போது சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்பன் சுற்றியுள்ள மீனவ கிராமப் பகுதிகளில் தொடர் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்துடன் ஒருவித பயத்துடனுமே தற்போது மீனவ மக்கள் மழையை சந்தித்து வருகின்றனர். ராமேஸ்வரம் தீவில் குறிப்பாக பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியில் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த தொடர் கனமழை காரணமாக பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்/ மேலும் பாம்பன் துறைமுகத்தில் முதலாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்களுக்கு வானிலை அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலம் பனிமூட்டம் சூழ்ந்து மழையாக காட்சி அளிக்கிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications