தமிழ்நாடே குலை நடுங்க..நாகர்கோவில் நடுநடுங்குதே! சட்டென்று மாறிய கிளைமேட்..ரெஸ்டுக்கு போன சூரியனார்!
கன்னியாகுமரி: கடும் வெயிலின் தாக்கத்தின் இடையே கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில் இன்று நாகர்கோவிலிலும் திடீரென மழை பெய்ததால் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். தென் மாவட்டங்களிலும் இதே நிலை தான் தொடர்கிறது.
கடும் வெயில்: இந்நிலையில் கன்னியாகுமரியில் வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், நாகர்கோவிலில் பெய்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதாவது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம்: இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் மாவட்டத்திற்குள் நகரப் பகுதிகளில் மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் மக்கள் மிகப்பெரிய சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையில் இன்று திடீரென நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் கடும் வெப்பத்திலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை தொடரும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை: இதேபோல் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று பகல் நேரத்தில் வெயில் தகித்தது. இந்நிலையில் திடீரென கிளைமேட் மாறத் தொடங்கியது. தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த கால நிலை நிலவி, பலத்த காற்றுடன் மேகமூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்மட்டம் உயர்வு: கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று கோழிப்போர்விளையில் 32.05 மில்லிமீட்டர் மழையும் சுருளகோடு 28.04 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 372 கனஅடி தண்ணீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications