சென்னைக்கு நவம்பர் இறுதியில் பொங்கல்.. 'ஃபெங்கல்' புயலால் ஆபத்து? வானிலை ஆர்வலர்கள் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது வலுவடைந்தால் புயலாக மாறும் என்றும், இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்படும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமல்லாது இந்த புயல் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் புயல்கள் உருவாவது இயல்பானதுதான். இந்த புயல்கள் பல நேரங்களில் ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்துவிடும். சில நேரங்களில் தமிழ்நாட்டை நோக்கி வருவதுண்டு. அதிலும் சென்னையை நோக்கி வரும்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது வங்கக்கடலில் வளிமண்டலே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

இது நவ.23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இது தாழ்வு மண்டலமாக இருந்து வலுவிழந்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், புயலாக வலுப்பெற்றால் சென்னைக்கு சிக்கல்தான். ஏனெனில் இதன் பாதை சென்னையை நோக்கித்தான் இருக்கிறது. இப்புயலுக்கு 'ஃபெங்கல்' என பெயரிடப்படும்.
இந்த 'ஃபெங்கல்' புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எனவே வங்கக்கடலில் நடக்கும் மாற்றங்களை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
மழையை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து











Click it and Unblock the Notifications