No Entry for Marina: ஆளைத் தள்ளும் காற்று! ஆளுயர அலைகள்! மெரினா செல்ல இன்றும் தடை நீட்டிப்பு
சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையிலும் மெரினா கடற்கரைச் செல்ல தடை விதித்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.

இது இன்று பிற்பகல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், கடலூர் , காரைக்காலுக்கு 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
டிட்வா புயல் கரையை கடக்காமல் கடலோர பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
டிட்வா புயல், புயலாகவே தமிழக கடற்கரைக்கு வந்ததால் நேற்று காலை முதலே பட்டினம்பாக்கம், மெரினா, நீலாங்கரை, திருவான்மியூர், காசிமேடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் கொந்தளித்தன.
இங்கெல்லாம் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருந்தது. பல அடி உயரத்திற்கு எழும்பின. இரவு நேரங்களில் அதிக சப்தத்துடன் மிரட்டி வந்தன. அது போல் ஆளைத் தள்ளும் அளவுக்கு காற்றும் வீசி வந்தது.
இதனால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. அப்படியும் மெரினாவுக்கு செல்ல மாற்று பாதை மூலம் பொதுமக்கள் உள்ளே வந்து புகைப்படங்களையும் ரீல்ஸ்களையும் எடுத்து வந்தனர்.
அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். எனினும் அவர்கள் அப்படி போனதும், இவர்கள் இந்த பக்கமாக நுழைந்து ஆர்ப்பரிக்கும் அலைகளில் குளித்து ஆபத்தை விலை கொடுத்து வாங்க முயன்றனர்.
இதையடுத்து டிட்வா புயலால் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல இன்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. இன்று மழை இல்லாவிட்டாலும் காற்றழுத்தமாகவே சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டிருப்பதால் காற்று அதிகம் வீசுகிறது. இதனால் இன்றும் இந்த தடை நீடிக்கிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications