சென்னை மட்டுமில்லை.. புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு
சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேடிசிசி எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை சில பகுதிகளுக்கு ரெட் அலட்டும், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல நாளை வரை மழை பெய்யும் என்பதால் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்தப் பகுதிகளில் அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டு பகுதிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications