4 மாவட்ட மக்களே உஷார்! காலையிலேயே மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
சென்னை : தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யும் என்றும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications