தமிழகத்தில் இன்று மழை பெய்யும்.. உள் மாவட்டங்களில் புழுக்கம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும். இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தையும், உடல் ரீதியான அசௌகரியங்களையும் சந்திக்க நேரிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு நாளில் தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
வெப்பம் ஒருபுறம் வாட்டினாலும், வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் 24 - 27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 28: இதே பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 29 - 30: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதேசமயம், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால் கடலோர தமிழகத்தில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பதால், மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications