ஆரம்பித்தது மழை.. அடுத்த 2 மணி நேரத்துக்கு விடாது.. தமிழகம் முழுக்க 29 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும், கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கனமழை ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வெயில் சற்று அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தென்காசி மாவட்டம், தேனி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி என பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்தது.

rain-begins-in-tamil-nadu-alert-issued-for-29-districts-heavy-showers-expected-for-the-next-2-hour

விடாமல் கொட்டும் மழை

இதனால் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. வழக்கமாக குற்றாலத்தில் மட்டுமே இந்த தூரல் இருக்கும் நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கும் 29 மாவட்டங்களில் மழை விடாமல் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 மாவட்டங்கள் என்னென்ன?

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திண்டுக்கல், குமரி, மதுரை, தென்காசி, நெல்லை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோனு நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருப்பத்தூர், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 21 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இன்று, நாளை கனமழை வெளுக்கும்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 1 ஆம் தேதி வரை

27-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 28-09-2025 முதல் 01-10-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (25-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (26-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+