அடடா.. மறுபடியுமா? சென்னையில் பல இடங்களில் மழை.. வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் இப்படியா?
சென்னை: சென்னையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னையின் 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றித் தவித்தனர். புயல் மழை காரணமாக 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் பந்தாடியுள்ளது புயல் மழை.

இன்னும் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடியவில்லை. மக்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். புயல் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ.6000 ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக, பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில், மழைநீர் அகற்றப்பட்டு நாளை முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட உள்ளன.
இந்நிலையில், சென்னையில் மீண்டும் மழை பெய்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, எம்.ஆர்.சி நகர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால், மழைநீர் மீண்டும் தேங்குமா என்ற கவலை சென்னை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனினும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications