விடிஞ்சிருச்சா இல்லையா? காலையில் குழப்பும் வானிலை! இன்னைக்கு சம்பவம் உறுதி! ‘இந்த’ ஊர்காரர்கள் உஷார்
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான கனமழை பெய்யும் எனவும், திருவாரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, அரியலூர், திருப்பூர், தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே வந்து புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக புயலாக மாறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 29ஆம் தேதி அது புயலாக மாறியது.
அதற்கு ஃபெஞ்சல் (fengal) என்று பெயரிடப்பட்டது. ஃபெஞ்சல் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் அளவுக்கு வலு குறையத் தொடங்கியது. எனினும், 29 ஆம் தேதி கரையைக் கடக்காமல் இரவு வரை போக்கு காட்டியது. பின்னர் மரக்காணம் நோக்கி நகரத் தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்தது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் 51 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் 49 செ.மீ மழை பதிவானது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான கனமழை பெய்யும் எனவும், திருவாரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, அரியலூர், திருப்பூர், தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications