அப்பாடா பெரும் நிம்மதி.. தமிழ்நாட்டில் இனி வெப்ப அலை இல்லை.. சென்னைக்கு மழை.. வெதர்மேன் ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இனி வெப்பம் படிப்படியாக குறைந்து பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் 13 ஆம் தேதிக்கு பிறகு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்றும் நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. இன்று காலையிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்து 2 வாரங்களுக்கு வெப்பம் குறைந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இனி சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேலடுக்கு சுழற்சி உருவாகிறது: தமிழகத்தில் வெப்ப அலை படிப்படியாக குறையும். மே மாதம் 5 ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை இருந்தது. இப்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை ஒரு காரணமாக சொன்னாலும், வரும் காலங்களில் ஒரு மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகேயும், குமரிக்கடல் அருகிலும் உருவாகிறது.
இனி வெப்பம் குறையும்: கடலில் இருந்து அதாவது கிழக்கில் இருந்து காற்று வீசக்கூடும். இதனால் இனி வெப்பம் சற்று குறைந்து காணப்படும். இன்று கூட பார்த்தோம் என்றால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பம் குறைந்து உள்ளதை பார்த்து இருப்பீர்கள். ஒருசில இடங்களில் மழை பெய்ததையும் பார்த்தோம். கிழக்கில் இருந்து காற்று வீசும் என்பதால், காற்றில் ஈரப்பதம் இருப்பதனால் வெப்பம் குறைந்து காணப்படும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மழை பெய்வதனாலும், கிழக்கில் இருந்து காற்று வீசுவதனாலும் இனிமேல் வெப்பம் குறைந்து காணப்படும். அடுத்து வரும் நாட்களில், காலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம்.
13 ஆம் தேதிக்கு பிறகு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பிறகு 12, 13 ஆம் தேதிக்கு பிறகு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்ய ஆரம்பிக்கும். தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் ரோம்பவே குறைந்து மழை பரவலாக பெய்யும்.
சென்னையில் மழை எப்போது?: அதாவது அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 13 ஆம் தேதிக்கு பிறகு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு மேலடுக்கு சுழற்றி முடிந்த பிறகு அதாவது 22 ஆம் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மே கடைசி வாரத்தில் தரைக்காற்று வீசி மழை குறைந்து மீண்டும் வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.
நல்ல மழை பெய்யும்: அடுத்த 2 வாரத்தை பொறுத்தவரை வெப்பம் சுத்தமாக குறைந்து காணப்பட வாய்ப்பு இருக்கிறது. மே 22 ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாகி காற்று வீசினால் வெயில் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் நாம் எதிர்பார்த்தது போல பரவலாக மழை பெய்யும். தென் மேற்கு பருவமழையில் நாம் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி, வால்பாறை போன்ற இடங்களில் ஜூன் முதல் வாரத்தில் இருந்தே நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications