TN Rain: இன்று பகல் நேரத்திலும் மழை பட்டைய கிளப்பப்போகுது.. 12 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Likely in 12 Tamil Nadu Districts Till 1 PM Today Says Met Department

வளிமண்டல சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த வாரம் முழுவதும் வடக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் மழை

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், "சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வெப்பநிலையும் சற்று குறையும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் இன்று மதியம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+