Cyclone Ditwah: அடுத்த 2 மணி நேரம் மழை விடாது.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவாரூர், விழுப்புரம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது மாலை 4 மணியளவில், சென்னையில் இருந்து 270 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் முதலில் 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் பிறகு 12 கிமீ வேகத்தில் நகர்ந்தது.

தொடர்ந்து தற்போது வேகம் குறைந்துள்ளது. 10 கிமீட்டரில் இருந்து 7 கிமீட்டராக குறைந்துள்ளது. சென்னையை நோக்கி 7 கிமீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் தற்போது டிட்வா புயலானது நகர்ந்து வருகிறது. புயல் சென்னையை நெருங்க நெருங்க பலத்த காற்று வீசி வருகிறது. மணிக்கு 70 முதல் 80 கிமீ வரை காற்ற வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது.
இந்த சூழலில் மாலை 5 மணியளவில் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் வலுவிழக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. புதுவையில் இருந்து 80 கிமீ தொலைவியில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது 5 கிமீ வேகம் என வேகம் குறைந்துள்ளது. இரவு 8 மணியளவில் புயல் வலுவிழக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications