அடுத்த 3 மணி நேரத்தில்.. திருச்சி, கோவை, ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நீலகிரி, கடலூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடை வெயிலால் தகித்து வந்த தமிழகம் அவ்வப்போது பெய்த மழையினால் சற்று குளிர்ந்துள்ளது. இதிலும் சென்னையில் 100 டிகிரிக்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீர் திடீரென பெய்த மழை குளிர செய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நீலகிரி, கடலூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications