சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்னைக்கு நைட் விடாது.. 15 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு சென்னை முதல் குமரி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது பெய்த கனமழை மீண்டும் நாளை முதல் பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் கூறிய நிலையில் இன்று இரவே சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பருவமழை தொடங்கிய பின்னரும் ஒரு 10 நாட்களுக்கு தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது.

இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென நிரம்பியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கின. ஆனால் அதற்கு பிறகு வெயில் வெளுத்து வாங்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தாலும் அதற்கு முந்தைய ஒரு வாரம் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.
இதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கனமழை கொட்டியது. நாளை முதல் தான் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறியிருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் இன்று இரவே மழை பெய்ய தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் கனமழை வெளுக்க தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, நெல்லை, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications