குடையை ரெடியா வச்சிக்கோங்க.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதை காண முடிந்தது.

Rain throughout the night at various places in Chennai

இந்த திடீர் மழையால் வெப்பத்தில் இருந்து சற்று விடுதலை கிடைத்தது. இந்த நிலையில், இரவு சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவானது. செங்கல்பட்டு விஐடியில் 3.7 செ.மீ, மேற்கு தாம்பரத்தில் 3.1 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்பட இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த வானிலை எச்சரிக்கையில், "தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+