நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழையும் விட்டு விளாசியது. குறிப்பாக இன்று மாலையில் நெல்லை, தென்காசியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த நிலையில் இன்று இரவும் மதுரை, விருதுநகர் உள்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில் இடையிடையே மழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் செஞ்சுரி போட்ட அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழையும் வெளுத்து வாங்கியது. குறிப்பாக மாலை 6 மணியளவில் இடி, மின்னலுடன் நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.

Rain to Lash Down Throughout the Night Meteorological Centre Issues Alert for 4 Districts Including Madurai

நெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கிய மழை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், இடைகால், ஆழ்வார்குறிச்சி, பாபநாசம் மற்றும் தென்காசி ஆலங்குளம், பாப்பான்குளம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

"தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை விருதுநகர், மதுரை மற்றும் கோவை, தேனியில் மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்படலாம்" என்று கூறியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

13, 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 15, 16 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை கொட்டும்

சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வெப்பநிலை எப்படி?

நாளை முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+