அடுத்த 2 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 17 மாவட்டங்கள் டார்கெட்.. விடாமல் கொட்டப் போகுது கனமழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியது.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

நெல்லையில் கொட்டிய கனமழை
இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்திற்கு பிறகு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. நெல்லை பழைய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, டவுன், பேட்டை, சுத்தமல்லி என நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. தென்காசி மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
"தமிழத்தில் இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications