வெயிலுக்கு லீவு.. அடுத்த 3 மணி நேரத்தில்.. இடி மின்னலுடன் 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூ, குமரி உள்பட 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மதிய நேரங்களில் வெயில் குறைந்து ஜில்லான கிளைமேட் இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலும் அடித்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. புளியங்குடி, குற்றாலம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை கொட்டியது. இதேபோன்று நெல்லை, குமரி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், குமரி மற்றும் காரைக்காலில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது"
மழை காரணமாக ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications