Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் உட்பட நாடு முழுக்க பெய்த ஆலங்கட்டி மழைக்கு பில் கேட்ஸும் அவரது Chemtrails மற்றும் Geoengineering தான் காரணம் என இணையத்தில் தகவல்கள் பரவின. இதற்கிடையே இது தொடர்பாக வெத்ரமேன் பிரதீப் ஜான் அறிவியல்பூர்வ விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்திருந்தது. இதற்கிடையே இந்த ஆலங்கட்டி மழைக்கு பில் கேட்ஸ் தான் காரணம். அவரது நிறுவனம் செய்த சதி காரணமாகவே இப்படி வானிலை மாறியதாக இணையத்தில் தகவல்கள் பரவிய சூழலில் இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

Reason for Hailstorms in Tamil nadu Weatherman ruled out Bill Gates connection reason is Natural

வெதர்மேன்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "TWM Specials - மார்ச் 17-19 காலத்தில் பெய்த மழையும், பல பகுதிகளில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழைக்கும் Bill Gates / Chemtrails / Geoengineering காரணமா? இந்தியாவின் பல பகுதிகளில் அண்மையில் பெய்த மழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக, சமூக ஊடகங்களில் Bill Gates மற்றும் "Chemtrails" குறித்துப் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? பார்க்கலாம்.

ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது? இடியுடன் கூடிய மேகங்களில் உருவாகும் பலமான மேலேற்ற காற்று (updrafts), நீர்த்துளிகளை மிக உயரமான குளிர் அடுக்கு பகுதிகளுக்குத் தூக்கிச் செல்கிறது. அங்கு அவை உறைந்து, அளவில் பெரிதாகி, எடையால் கீழே விழும்போது ஆலங்கட்டி மழையாக மாறுகின்றன. இந்த நிகழ்வு இந்தியாவில் பொதுவாக ஏப்ரல்-மே மாதங்களில் காணப்படும், மேலும் அவை பெரும்பாலும் தனித்தனியான (isolated) இடங்களில் மட்டுமே ஏற்படும்.

ஆலங்கட்டி மழை

மார்ச் மாத ஆலங்கட்டி மழை எப்படி வேறுபடுகிறது? ஏப்ரல்-மே மாத ஆலங்கட்டி மழைகள் பொதுவாகக் குறுகிய காலமும், தனிப்பட்ட பகுதிகளிலும் மட்டுமே இருக்கும். ஆனால் மார்ச் மாதத்தில் ஏற்படும் ஆலங்கட்டி மழைகள் பெரும்பரப்பில் (widespread) மற்றும் ஒருங்கிணைந்த (synoptic scale) அமைப்புகளால் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் மேல் மட்ட வளிமண்டல அமைப்புகள் (Upper-level systems), மேற்கத்திய குறுக்கீடுகள் (Western Disturbances), தாழ்வுப் பகுதி பள்ளங்கள் (Troughs), ஜெட் ஸ்ட்ரீம் (Jet Stream) மாற்றங்கள்.

இவை அனைத்தும் மேல் வளிமண்டல விலகலை (Upper Air Divergence) அதிகரித்து, கடுமையான வானிலை உருவாக உதவுகின்றன. ஈரப்பதம் மற்றும் நில வெப்பத்துடன் இணைந்து, பரவலான இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழையை உருவாக்குகின்றன.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?

கடந்த 40 ஆண்டுகளின் தரவுகளின்படி: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆலங்கட்டி மழை அதிகம் பதிவாகியுள்ளது உச்ச காலம்: மார்ச் முதல் பாதி (91-95% வாய்ப்பு) குறைந்த வாய்ப்பு (6-10%): குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு, திரிபுரா, மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து உள்ளன. மார்ச் மாதத்தில் அதிக ஆலங்கட்டி மழை ஏற்பட்ட ஆண்டுகள் என்றால் 1951, 1957, 1978, 1981, 1986, 1989, 2012, 2014, 2015, 2026 ஆகும்.

முக்கிய காரணம் மேல் வளிமண்டல இயக்கங்கள்: ஜெட் ஸ்ட்ரீம் மற்றும் பள்ள அமைப்புகளுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல விலகல், கடுமையான வானிலை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உலகளாவிய வானிலை நிபுணர்கள் ஏற்கின்றனர்.

"Chemtrails" என்பது ஒரு முற்றிலும் தவறான சதி கோட்பாடு. விமானங்கள் பின்னால் காணப்படும் கோடுகள்: அவை Contrails (நீராவி உறைதல்) இயல்பான நிகழ்வு. இது பெரிய அளவில் ஆலங்கட்டி மழை உருவாக்கும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும். அதனால், Bill Gates அல்லது "Chemtrails" காரணமாக மார்ச் மழை ஏற்பட்டது என்ற தகவல்கள் முழுக்க முழுக்க தவறானவை.

உண்மையான காரணம் என்ன?

மார்ச் மாத மழை மற்றும் ஆலங்கட்டி மழைகள் என்பது இயற்கையானவை, பருவநிலை சார்ந்தவை. வளிமண்டல அசாதாரண நிலை (Instability), ஈரப்பதம் (Moisture incursion), மேற்கத்தியக் குறுக்கீடுகள், ஜெட் ஸ்ட்ரீம் வளைவு (Kink in Jet Stream) ஆகியவை இதற்குக் காரணமாகும்.

தமிழ்நாடு சிறப்பு நிலை

தமிழ்நாட்டில் ஆலங்கட்டி மழை சாதாரணமாக ஏப்ரல்-மே மாதங்களில் ஒரு சில இடங்களில் பெய்யும். ஆனால் மார்ச் 18-19: மாநிலம் முழுவதும் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.. சாதாரணமாக மகாராஷ்டிரா / கர்நாடகா வரை மட்டுமே இருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் மிக தெற்காகத் தமிழ்நாடு வரை இறங்கியது இதற்கான முக்கிய காரணமாகும்.

ஏன் ஆலங்கட்டி பனி பல மணி நேரம் அப்படியே இருந்தது என்றால் ஆலங்கட்டி பனி தரையில் தேங்கும்போது அது ஒரு குளிர் சேமிப்பகமாக (Heat Sink) செயல்படுகிறது. இதனால் தரை மற்றும் அருகிலுள்ள காற்றைக் குளிர்விக்கிறது.. இதனால் ஒரு சிறிய குளிர் சூழல் (Micro-climate) உருவாகிறது அதனால் பனி பல மணி நேரம் கரையாமல் இருக்கும். 2012 மார்ச் ஊட்டி ஆலங்கட்டி மழை நினைவிருக்கிறதா? அப்போது ஊட்டி, பல மணி நேரம் காஷ்மீர் போல மாறியது!" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+