Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தத்தளிக்கும் புதுச்சேரி.. விடாத மழை.. புதுச்சேரி + தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த பெஞ்சல் புயல். மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன.

weather tamilnadu weatherman

இரவு முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் புதுச்சேரி த‌த்தளிக்க தொடங்கி உள்ளது. புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சி, தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெஞ்சல் புயல் இழுத்து வந்த மேகங்கள் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டையில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு பெய்யவாய்ப்புள்ளது.

எப்போது கரையை கடந்தது: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல புயல் 35 மணி நேரம் பயணித்து இன்று (டிச.01) அதிகாலை 1.30 மணிக்கு மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது; 11.30 மணிக்கு பெரும்பாலான பகுதிகள் கரையை கடந்தாலும் 1.30 மணிக்கே முழுமையாக அந்த புயலின் பாகம் கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலிமை இழக்கும்.

இதனால் அடுத்த 3 மணி நேரம் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்த புயல் தற்போது Pull Effect எனப்படும் இழுவை காரணமாக கூடுதலாக மேகங்களை இழுத்து வந்துள்ளது. இந்த மேகங்கள் மழையை கொடுக்கும். இப்படி மழையை கொடுப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல காற்றும், மழையும் நீடிக்கும்.

அதன்பின் இந்த புயல் தாழ்வு நிலையாக வலிமை இழக்கும். தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலிமை இழக்கும். அதன்பின் முழுமையாக வலிமை இழக்கும். பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் தொடர்ந்து காற்று வீசும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+