‛‛மக்களே வெளியே வராதீங்க’’.. இன்று முதல் 3 நாட்கள் தமிழகத்தில் ‛ரெட் அலர்ட்’.. அதி கனமழையால் உஷார்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழை முதல் அதி கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மே மாதத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கினாலும் கூட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தினமும் மதியத்துக்கு மேல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகத்தின் பெரும்பலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதகிளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ரெட் அலர்ட் காரணமாக தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கன முதல் அதிக கனமழை பெய்யும். அதேபோல் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளது. அதோடு தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ரெட் அலர்ட் காரணமாக கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மரை, சிவகங்கை, புதக்கோட்டை , தங்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மே 21ம் தேதி தமிழகத்தில் பெரும்பலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாவட்ட வாரியாக பார்த்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், விருதுநகர் திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றுமு் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
அதேபோல் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதகிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்படி தமிழகம் முழுவதும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பேரிடர் மீட்பு படை மூலம் தென்காசி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் செல்போன் எண்களுக்கு மெசேஜ்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications