சென்னைக்கு ‛ரெட் அலர்ட்’.. இன்று முதல் 4 நாள் என்ன நடக்கும்? வானிலை மையத்தின் பாலச்சந்திரன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு கன முதல் மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ என்பது விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு முழுவீச்சில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் ‛ரெட் அலர்ட்’ காரணமாக இன்று முதல் சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானிலையில் நடக்கும் மாற்றம் பற்றியும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான சீசன் மழை தற்போது தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. அதன்படி மதுரை, சிவகங்கை உள்பட பல இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

rain chennai

அதேபோல் இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோவை, சேலத்திலும் மழை பெய்து வருகிறது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளது.

அதேபோல் சென்னைக்கு 2 நாட்கள் கன முதல் மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை மறுநாள் (அக்டோபர் 15), அக்டோபர் 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. கொட்ட போகுது கனமழை! வானிலை மையம் தந்த எச்சரிக்கை


‛ரெட் அலர்ட்’ என்பது 24 மணிநேரத்தில் 204.5 மில்லி மீட்டர் மழையை விட அதிகம் பெய்யும். அதாவது ‛ரெட் அலர்ட்’ விடுக்கப்படும்போது ஏறக்குறைய 20 சென்டிமீட்டரை விட அதிகளவில் மழை பெய்யும். அதுமட்டுமின்றி அனைத்து வகையான போக்குவரத்து, மின்சப்ளை பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதோடு, மக்களின் உயிருக்கும் ஆபத்தும் ஏற்படலாம்.

இந்நிலையில் தான் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் காரணமாக மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநாகராட்சியும், தமிழக அரசும் சேர்ந்து எடுத்துள்ளது. பேரிடர் மீட்பு படையினர், படகுகள், மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒன்றல்ல.. இரண்டல்ல.. அடுத்த 3 நாட்களில்.. 47 செமீ மழை பெய்ய போகுது.. சென்னைக்கு ரெட் அலர்ட்


இந்நிலையில் தான் ‛ரெட் அலர்ட்’ வேளையில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழை காலக்கட்டம் அக்டோபர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அக்டோபர் 1 முதல் இன்று வரை சீசனுக்கானது. சீசன் மழையை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 95.3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு மழை என்பது 57.4 மில்லி மீட்டராகும். அப்படி பார்த்தால் தற்போது இயல்பை விட 66 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது.

அடிப்படையாக பார்த்தால் இப்போது அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்தம் உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே வரக்கூடும். இதன் காரணமாக நமக்கு மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக கூடி நாளை முதல் அதிகரிக்கும். அதன்பிறகு 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் இயல்பு தேதி என்பது அக்டோபர் 20 தான். தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் 2 நிகழ்வுகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றொடொன்று இணைந்து இருக்கும் சூழலை நாம் பார்க்கிறோம். தென்மேற்கு பருவமழை இன்று பல இடங்களில் விலகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை என்பது தொடங்கும்’’ என்றார்.

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலக்கட்டத்தில் பெய்யும் நார்மலான மழையாக இதனை பார்க்க வேண்டுமா? இல்லாவிட்டால் அதிதீவிர மழையாகவும், அச்சப்பட வேண்டிய மழையாக இருக்குமா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பாலச்சந்திரன், ‛‛இயல்பை விட அதிகமாக இருக்க கூடிய சூழலை பார்க்கிறோம். அதாவது அரபிக்கடல் - வங்கக்கடல் இணைந்து முழுமையாக இருக்கிறது. இது மழைக்கான காலக்கட்டம்’’ என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+