ரெட் தக்காளி அலர்ட்! "சென்னைக்கு இன்னுக்கு ஒரு புடி.." வெளுக்கும் மழை! நறுக்கென விளக்கிய வெதர்மேன்
சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், இரவு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று இரவும் தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
கொட்டும் மழை: மேலும், நுங்கம்பாக்கம், எழும்பூர், தி. நகர், பாரிமுனை, சென்டிரல், விருகம்பாக்கம் என பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் கனமழை கொட்டியது. இன்னும் கூட நகரில் பல இடங்களில் நல்ல மழை பெய்தே வருகிறது. இந்த திடீர் மழையால் சென்னை முழுக்க குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் இரவு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு மேலே நிகழும் வானிலை மாற்றங்களை விளக்கம் மேப்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும்,
தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை நகரம் மற்றும் கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளுக்கு ரெட் தக்காளி அலர்ட்.. மழை மேகங்கள் சென்னை நகரை நெருங்கி வருகிறது. இதில் இடியுடன் கூடிய மழையின் அளவைப் பாருங்கள்.. இதே உக்கிரம் நீடித்தால், ஆகஸ்ட் மாதம் பெய்யும் மழை அளவு இன்று ஒரு புடி புடிக்கலாம்.. கேடிசிசி பகுதிகளில் இன்று அற்புதமான இரவு காத்திருக்கு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் வானிலை சார்ந்த எந்தவொரு செயல்பாடுகளும் பெரிதாக இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பலத்த காற்றும் வீசும் நிலையில், பல பகுதிகளில் கனமழை பெய்யும் போது கனமழையும் வீசும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில் சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications