மேகம் கருக்குது.. சென்னையில் சட்டென இருண்டு திரண்ட வானம்.. வெப்பம் தணிந்து கனமழை அறிகுறி!
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பிற்பகல் வரை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்துள்ளது. சென்னை நகர் முழுக்கவே மேகம் கருத்து மழை வரும் நிலை உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் திடீரென வானிலை மாறி அதன் சுற்றுவட்டார பகுதிகளான போரூர், வளசரவாக்கம் பகுதிகளிலும் சட்டென்று குளுமையான வானிலை நிலவுகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், திருவள்ளூர் நகரப் பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் சென்னை நகர் முழுக்கவே வானம் கருத்து மேகங்கள் திரண்டு காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்காக அதாவது மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications