மிரட்ட வருகிறது ரெமல் புயல்.. வங்கக்கடலில் ஆரம்பம்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பாருங்க.. அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ரெமல் புயலாக உருவாகிறது.. இந்த ரெமல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த வருடம் அதாவது மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை மழை கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் கொட்டி வருகிறது..

நல்ல மழை: தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களாகவே லேசான மழை பெய்து வருகிறது.
அந்தவகையில், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.. வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
புதிய புயல்: இந்நிலையில்தான், வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கிறது.. இந்த புயலுக்கு ரெமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த வருடத்தில் வீசும் முதல் புயல் இதுவாகும். இதுகுறித்து இந்திய வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
நாளை கடக்கிறது: இது மேலும் அதே திசையில் நகர்ந்து இன்று அதாவது மே 25ம் தேதி புயலாக உருவாகும். ரெமல் புயல் நாளை 26ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வருகிற நாளை 26ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.இந்த ரெமல் புயல் காரணமாக, தமிழகத்திலும் தாக்கம் இருக்கும் என்கிறார்கள்.. குறிப்பாக, வட மாவட்டங்களில் அதிகமான வெப்பம் ஏற்படும் என்றும், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது..
வங்க கடல்: இந்நிலையில், சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "வங்கக்கடலில் உருவாகும் ரெமல் புயல் வடக்கு பகுதியை நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று முதல் வரும் 30ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் என தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மீனவர்கள்: சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 38 செல்சியசை ஒட்டி இருக்கும்.. இதனால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, புயல் காரணமாக மழை பொழிவு குறையும் என்பதுடன், இந்த மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் என சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தொடர் மழை: இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications