இடி மின்னலுடன் விடிய விடிய அடித்து நொறுக்கிய கனமழை! மிரண்டு போன சேலம் மக்கள்.. கிளைமேட்டே மாறிடுச்சு

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சேலம் மாவட்டம் வாழப்படி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் சுற்று வட்டாரங்களிலும் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்று வட்டாரப் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியுள்ளது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

weather rain chennai

புதுக்கோட்டை நகர்ப் பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்துக் கட்டியது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், பந்தத்தூர், கோவிலூர், மானகிரி, தேவகோட்டை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, வில்லியநல்லூர், சித்தர்காடு குத்தாலம், கோமல், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த‌து. கும்பகோணம் மாநகராட்சியில் செட்டிமண்டபம், சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அசூர், உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதி, கத்தாளம்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை பெய்தது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை, அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 8: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 9: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்டோபர் 10: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11.10.2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+