வெயில் உக்கிரம்.. திடீரென மயங்கி விழுந்த 50 மாணவ, மாணவிகள்.. பள்ளி திறப்பு ஒத்திவைப்பு.. பீகாரில்
சென்னை: கடும் வெப்பம் காரணமாக 50 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள். பீகாரின் பெகுசராய் மற்றும் ஷேக்புராவில் இதுபோன்ற சம்பவங்கள் இன்று பதிவாகின. சுமார் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார், மே 30 முதல் ஜூன் 08 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. டெல்லியில் கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. நூற்றாண்டு சாதனையை இது முறியடித்தது. ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

பெகுசராய் மற்றும் ஷேக்புரா ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக சுமார் 50 பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்தனர். ஷேக்புராவில் ஒரு பள்ளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
பெகுசராய் மாதிஹானி மத்திய வித்தியாலயத்தில் 18 சிறுமிகள் வெப்பத்தால் மயங்கி விழுந்து மதிஹானி பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்விசிறிகள், ஜெனரேட்டர்கள் இருந்தும், மாணவர்களின் நிலை மிகவும் மோசமடைந்தது. தலைமை ஆசிரியர் ஓடிப்போய் ஓஆர்எஸ் எனப்படும் எனர்ஜி பானங்களை வழங்கினார், ஆனால் மயக்கம் தொடர்ந்துள்ளது.
தமிழகத்திலும் பள்ளித் திறப்பு தள்ளிப்போகுமா (Tamil Nadu school re open) என்ற எதிர்பார்ப்பை வெப்ப நிலை உயர்வு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை இரு தினங்களுக்கு முன்பு பதிலளித்தது. ஆம்.. 2024ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 6ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications