நீலகிரியில் கொட்டி தீர்க்கும் கனமழை.. குன்னூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல கனமழை தீவிரம் எடுத்ததால், இன்று குன்னூர் தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி தொடங்கி நவ.3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 301.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. எனவே ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, குன்னூர் ராணுவ பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குர்ஹா ஹில் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே, கனமழை காரணமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இன்று குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications