நாகையில் பள்ளிகளுக்கு நோ லீவு.. இன்று வழக்கம் போல் இயங்கும்.. புதுவை, காரைக்காலில் விடுமுறை
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மழை இல்லாததால் வழக்கம் போல் கல்வி நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். புதுவை மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து. இந்த புயல் சின்னம் தற்போது நகராமல் அப்படியே நிலை கொண்டுள்ளது. இதனால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வங்க கடலில் புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நேற்றும் தொடர் மழை பெய்தது.

குறிப்பாக நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிவசக்தி நகர், நாகூர் வள்ளியம்மை நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. கனமழை பெய்ததால் நாகை மாவட்டத்த்தில் பள்ளி, கல்லூரிகளுக்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று நாகையில் மழை இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மயிலாதுறை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள 2 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications