தமிழகத்தில் உக்கிரம் காட்டிய வெயில்.. இன்று மட்டும் 13 இடங்களில் சதம்! அதிகபட்சம் எங்கேன்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் அரசியல் களம் அனல் ஒரு புறம் இருக்க வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் உக்கிரம் காட்டியது. குறிப்பாக இன்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மதிய நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றன. வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்து இருந்தனர்.

13 இடங்களில் வெயில் சதம்:
அதன்படி இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* கரூர் (பரமத்தி) - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
* வேலூர் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)
* மதுரை விமானநிலையம் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
* திருச்சி - 104.18 டிகிரி (40.1 செல்சியஸ்)
* ஈரோடு - 104 டிகிரி (40 செல்சியஸ்)
* நாமக்கல் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
* மதுரை நகரம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)
* சேலம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)
* திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
* தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
* கோவை - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
* பாளையங்கோட்டை - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
* திருத்தணி - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
ஒரு சில இடங்களில் மழை பெய்யும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, வடக்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
15-04-2026 முதல் 19-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையி எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (15-04-2026) மற்றும் நாளை (16-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications