அரபிக் கடலில் அதிதீவிர புயலானது தேஜ் புயல் ... அட்டாக்கில் இருந்து மகாராஷ்டிரா, குஜாராத் எஸ்கேப்!
டெல்லி: அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில் நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு அரபிக் கடலில் கடந்த 19-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது.

தேஜ் புயல்: இதனைத் தொடர்ந்து தென்மேற்கு அரபிக் கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. அரபிக் கடலில் உருவான இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டிருந்தது. இந்த தேஜ் புயல் தீவிர புயலாக உருமாறி உள்ளது. இது மேலும் வலுவடைந்து தற்போது அதிதீவிர புயலாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எங்கே இருந்தது? இன்று அதிகாலை நிலவரப்படி தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அக்டோபர் 22 (இன்று) மாலைக்குள் அதிதீவிர புயலாக உருமாறும். ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 730 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

கரையை கடப்பது எப்போது?: மேலும் தேஜ் அதிதீவிர புயலாக மாறிய நிலையில் ஏமன்- ஓமன் இடையே ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே அக்டோபர் 25-ந் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேஜ் புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் தற்போது தேஜ் புயல் வேறு திசையில் பயணிப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் தேஜ் புயல் ஆபத்தில் இருந்து தப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்துக்கு பாதிப்பில்லை: இது குறித்து குஜராத்தின் அகமதாபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொகந்தி கூறுகையில், அக்டோபர் 22 (இன்று) மாலை அதி தீவிர புயலாக தேஜ் புயல் உருமாறும். தெற்கு ஓமன், ஏமன் கடற்கரை நோக்கி இது நகருகிறது. வடக்கு வடமேற்கு திசையில் தேஜ் புயல் நகர்ந்தாலும் குஜராத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது. அடுத்த 7 நாட்களுக்கு குஜராத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications