இன்று வெயிலுக்கு ரெஸ்ட்.. தமிழகத்தில் பொளக்க போகுது கோடை மழை.. எங்கு தெரியுமா.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. முதலில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில், அதேபோல டிச. இறுதியில் தென் மாவட்டங்களிலும் தீவிர மழை பெய்தது.

பருவமழை முடிந்த உடனே தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் தான் வெப்பம் உச்சம் தொடும் நிலையில், இந்த முறை பிப். மாதமே பல இடங்களில் வெப்பம் சதமடித்தது.
அதன் பிறகு வெப்பம் உச்சத்திலேயே இருந்த நிலையில், இப்போது கடந்த சில நாட்களாக மட்டுமே ஓரிரு இடங்களில் கணிசமாக மழை பெய்து இருக்கிறது. அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை ஏப்.3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஒரு சொட்டு மழை இல்லை... வரலாறு காணாத வெப்பம் வேற.. பெங்களூர்வாசிகளை கதற விட்ட மார்ச்! அட பாவமே
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்த வரை, வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், புதுக்கோட்டையின் நாகுடி மற்றும் ராமநாதபுரத்தின் கமதியில் கணிசமாக மழை பெய்துள்ளது. அதேபோல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications