வருது வருது.. கிட்ட வருது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் இப்பவே ஆரம்பிக்குதே.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
வழக்கமாக ஜுன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.. ஆனால் இந்த வருடம், முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது..

அரபிக்கடல்: அதற்கேற்றவாறு, தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்குவாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சிய மொஹபத்ரா இந்த முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது.. நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும், வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும், வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும்.
மானாவாரி சாகுபடி: நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, சென்னை வானிலை மையமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், தமிழகத்தில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம்: தமிழகத்தில் இன்று 28ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒன்றரை மாத காலம் வாட்டி வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications