பிபி, சுகர் மாத்திரையெல்லாம் கொடுத்தாங்க! அன்பான கிராம மக்கள்.. ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகள் உருக்கம்
சென்னை: பிபி, சுகர் மாத்திரையெல்லாம் கொடுத்தாங்க என கிராம மக்கள் குறித்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் உருக்கமாக தெரிவித்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நின்றாலும் வெள்ளம் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை.

பல இடங்களில் சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல கிராமங்களை மீட்க முடியாத நிலை இருக்கிறது. சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நிறைய தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டஇந்த ரயிலில் இருந்த பயணிகளுக்கு அன்று கையில் இருந்த உணவை வைத்து சமாளித்துக் கொண்டனர். அதன் பின்னர் திங்கள்கிழமை அன்று மதியம் வரை அக்கம் பக்கம் தேடி போய் உணவு வாங்கி வந்து உண்டனர்.
ஆனால் திங்கள்கிழமை மதியத்திற்கு மேல் வெள்ள நீர் அதிகம் உயர தொடங்கியதால் பயணிகளால் சாப்பாடு வாங்க வெளியே போக முடியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உள்ளூர் கிராம மக்களே உணவு தந்ததாக உருக்கமாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முதல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் போதும் போதும் என்ற அளவுக்கு உணவுகளை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
3 நாட்களாக ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த அவர்களை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்த பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு ரயில் இன்று காலை வந்தடைந்தது.
பயணிகளுக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே சார்பில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னைக்கு பத்திரமாக வந்த அவர்களுக்கு மீண்டும் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டது.
அப்போது பயணிகள் கூறுகையில், எங்களுக்கு முழுக்க முழுக்க கிராம மக்கள்தான் உதவினார்கள். அவர்களுக்கு உணவு இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு வேளா வேளைக்கு சமைத்து கொடுத்தார்கள். அது போல் அவர்களுடைய போர்வை, பெட்ஷீட் உள்ளிட்டவைகளையும் எங்களுக்கு கொடுத்தனர்.
அரசு சார்பில் உதவினார்கள் நாங்கள் இல்லை என சொல்லவில்லை, ஆனால் திங்கள்கிழமை முழுக்க எங்களுக்கு உதவினார்கள். குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டைகளை செய்து கொடுத்தார்கள். அவர்கள் உண்ணும் பிபி மாத்திரை, சுகர் மாத்திரைகளை எல்லாம் கொடுத்தார்கள். அந்த மக்களின் அன்பை மறக்கவே முடியாது.
எங்களை கடைசி வரை நின்று வழி அனுப்பிவைத்தார்கள். இனி அந்த பக்கம் போனால் அந்த கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவர்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் வைத்து சமைத்து கொடுத்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு சமையல் செய்ய பொருட்கள் இருக்கிறதா என தெரியவில்லை.. அவர்கள் இருந்த பகுதியையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications