சென்னையில் திடீரென விட்டு விளாசிய மழை.. இரவு வரை தொடரும்.. மேலும் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னையில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று இரவு வரை இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் காலையில் வெயிலும் மதியத்திற்கு பிறகு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் மழை பெய்தது.

திடீரென கொட்டிய மழை
இதேபோன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இதேபோன்று சென்னையிலும் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.
அதன்படியே காலையில் இருந்து வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென மாலை 3.30 மணியளவில் மழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் குடையின்றி வெளியே சென்ற மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
கொளுத்தும் வெயிலை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்திருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மழையான இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்
முன்னதாக வானிலை மையம் கூறுகையில், "சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டூ 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications