சென்னையில் அதிகாலையில் நடந்த ஆச்சர்யம்.. வானிலையில் சட்டென ஏற்பட்ட மாற்றம்.. விக்கித்து போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. கடுமையாக வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையில் திடீரென மழை பெய்தது.

தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.

weather tamilnadu weatherman

5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. பெங்களூரில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்: சென்னையில் வர உள்ள மழை காலத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இங்கே கடைசி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கால்வாய்களை தூர்வாருவது, வெள்ள நீர் வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்வது, புதிய அமைப்புகளை கட்டுவது என்று தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன.

வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம், இரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத்துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நம்முடைய அரசு அலுவலர்கள் உரிய விளக்கத்தினையும், திட்டங்களின் தற்போதைய நிலையினையும் தெரிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும்.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்திட வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள மனித நுழைவு பகுதி மற்றும் இரண்டு மனித நுழைவு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் எந்த தவறுகளும் நிகழாவண்ணம் பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+