புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு பாதிப்பா? சென்னை வானிலை மைய இயக்குநர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "வடக்கடலோர கர்நாடகா பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

இது வட திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்புகள் இல்லை என்றாலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பரவலான மழை அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு அளவுக்கு குறைய கூடும்.
நடப்பு தென்மேற்கு பருவ மழையானது அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் கேரளாவில் தொடங்கும். தெற்கு அரபிக்கடல் பகுதிகளான கச்சத்தீவு மாலத்தீவு கடல் பகுதிகள் மற்றும் தமிழக கடற் பகுதிகள், மத்திய வங்க கடல் பகுதிகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் வரை மழை முன்னேறி செல்வதற்கான சாத்திய கூறுகள் தெரிகிறது.
தமிழக வானிலையைப் பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை தமிழக மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு சில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் படிப்படியாக 2 முதல் 3 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications