Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.. புரட்டிப் போட்ட பெஞ்சல் புயல் கனமழை.. மக்களுக்கு நிவாரணம்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார்.

இன்று காலை சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டுச் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

mk stalin villupuram cyclone fengal

விழுப்புரம் செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் மழை மற்றும் புயல் காரணமாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் இடத்தில் நடைபெற்ற பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். விழுப்புரம் மந்தவாய்புதுக்குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செல்லும் வழியில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.

இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, அன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

mk stalin villupuram cyclone fengal

விழுப்புரம் மாவட்டம் முழுக்க மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சிங்கனூரில் உள்ள ஏரியின் மதகு உடைந்து மழை நீரானது அந்தப் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனிக்குள் புகுந்தது.

இதனால் டிராக்டர், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நெல் அறுவடை வாகனங்கள் உட்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. நீர், நிறுவனத்துக்குள் புகுந்ததால், அங்குள்ள வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் கம்பெனி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வீடூர் அணை: கனமழையின் காரணமாக வீடூர் அணை அமைந்திருக்கும் பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 26 செமீ அளவிற்கு மழை பெய்தது. இந்த மழை காரணமாக வீடூர் அணை தனது முழு கொள்ளளவான 32 அடியில் 30.5 அடிக்கு தண்ணீர் நிரம்பியதால், அனையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது விநாடிக்கு 36 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், எடையப்பட்டு, ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராம மக்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரக்காணத்தில் அரசு பள்ளியில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு வேட்டி- சேலை மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். வேளாண்மை துறை சார்பில் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை நின்ற 3 நாட்களுக்கு பிறகு இதுகுறித்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+