இரவோடு இரவாக செம அறிவிப்பு.. அப்படியே மலைத்து போன 27 மாவட்டங்கள்.. மழைக்கு இடையே வந்த சர்ப்ரைஸ்
சென்னை; விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சம்பா பயிர் சாகுபடி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 1 லட்சம் ஏக்கர் சாகுபடி நீரில் மூழ்கி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் இந்த பயிர்கள் அப்படியே நீரில் மூழ்கி உள்ளன. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினத்திற்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 13 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
வானிலை மைய எச்சரிக்கை; விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (15-11-2023) காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது.
சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, சனி (18.11.2023) மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் (19.11.2023) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications