ரூ.2000 டூ ரூ. 5000.. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. தமிழக அரசின் வேகமான ஆலோசனை?
சென்னை: தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.

மழை அளவு: கிருஷ்ணகிரியில் 50.30 செ.மீ. கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 38 செமீ மழை பல இடங்களில் பெய்துள்ளது. விழுப்புரத்தில் கிட்டத்தட்ட 35 செமீ மழை பெய்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்கள் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. அதிலும் கிருஷ்ணகிரி கடந்த 300 நாடுகளில் இல்லாத மிக மோசமான சேதத்தை அடைந்துள்ளது.
சேத விவரம்:
1. கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
2. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்திற்கு கீழ் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எழுப்பூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக புறப்பட இருந்த சோழன், தேஜஸ், குருவாயூர், வைகை, பல்லவன் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மதுரை, ராமேஸ்வரம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரம் -> காட்பாடி -> அரக்கோணம் மார்க்கமாக எழும்பூருக்கு இயக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக ரயில்கள் ரத்து. செய்யப்பட்டு உள்ளன. பாதை மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
3. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், விக்கிரவாண்டி அருகே மழைநீர் தேங்கியுள்ளதால் சித்தனியல் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
4. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
5. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர்..
6. திருவண்ணாமலையில் நேற்று வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது குறுகலான பாதை என்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மரத்தை அறுக்கும் இயந்திரம் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டின் மேற்கூரை உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.
நிவாரணம்: தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2000 டூ ரூ. 5000 வரை இழப்பை பொறுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சேதங்களை பார்வையிட்டு பின்னர் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications