நைட்டு நல்ல மழை இருக்கு! மக்களே உஷாரா இருங்க.. 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக பதிவாகிவந்த நிலையில், தற்போது மழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இரவு 1 மணி வரை தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்:
64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தின் மழை நிலவரத்தை பொறுத்த வரை, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மேட்டூர் (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 5,
மேட்டூர் AWS (சேலம்), அம்மாபேட்டை (ஈரோடு) 4,
போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி), ஒகேனக்கல் (தர்மபுரி), சோத்துப்பாறை (தேனி) தலா 3,
மாரண்டஹள்ளி (தர்மபுரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 2,
வாணியம்பாடி (திருப்பத்தூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), வேலூர் (வேலூர்), சங்கரன்கோயில் (தென்காசி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தென்காசி (தென்காசி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூர் : 38.6° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) தர்மபுரியில் 21.0° செல்சியஸ் பதிவாகியிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 22-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது.
17-04-2025 முதல் 22-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 17-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
16-04-2025 மற்றும் 17-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 18-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (16-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான - கனமழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (17-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள் 16-04-2025 முதல் 20-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
