நாளை கடைசி மழை.. பங்குனி வெயிலுக்கு ரெடியா இருங்க! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமடைந்து வந்த நிலையில், திடீரென மழை எட்டி பார்த்தது. நாளையுடன் மழை விடைபெறும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் வெயில் தீவிரமடையும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

27-03-2025 மற்றும் 28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய
மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2" செல்சியஸ் உயரக்கூடும்.
வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3" செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (27-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 8 செ.மீ, தேவாலா (நீலகிரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 3 செ.மீ, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), உபாசி TRE AWS (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2 செ.மீ, குந்தா பாலம் (நீலகிரி) 1செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
வேலூரில் அதிகபட்சமாக 38.6° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 20.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் பதிவாகியுள்ளது. காரைக்கால் 34-39° செல்சியஸ் மற்றும் தமிழக பகுதிகளில் 32-35 செல்சியஸ் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications