உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. 26 கலெக்டர்களுக்கு வருவாய் - பேரிடர் துறை அவசர கடிதம்!
சென்னை: இன்று முதல் 19ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 26 மாவட் கலெக்டர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை என்பது பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெயிலுக்கு பதில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கனமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் மே 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை சமாளிக்க கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்து மழையில் மக்கள் பாதிக்காத வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கனமழை பாதிப்பு தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். கனமழை எச்சரிக்கையால் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கையின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர கடிதம் என்பது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதப்பட்டுள்ளது.
இந்த அவசர கடிதத்துக்கு முக்கிய காரணம் என்பது வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தான் காரணம். அதாவது வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று முதல் மே 19 வரை அநேக இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்து இருந்தது. அதன்படி இன்றைய தினம் தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டஙகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 17 ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மே 18 ம் தேதியை பொறுத்தவரை தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,தினப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19ம் தேதியை பொறுத்தவரை தமிழகத்தின் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ரிஸ இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம். விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications