"தமிழகத்திற்கு மோசமான நாள்.." உச்சத்தில் வெப்பம்.. மழைக்கு சான்ஸ் இருக்கா? வெதர்மேன் மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்தது. இதற்கிடையே இன்றைய தினமும் வெப்பமான வானிலை தொடரும் என்று வெதர்மேன் எச்சரித்துள்ளார். மேலும், சென்னை கிளைமேட் குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் முடிந்த பிறகே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே சென்று கூட திரும்ப முடியாத சூழலே நிலவுகிறது.

அதிகரிக்கும் வெப்பம்
நேற்றைய தினம் கூட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. மொத்தம் 8 இடங்களில் வெப்பம் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், கரூர்- 102.2 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூர்- 102.2 டிகிரி, சென்னை மீனம்பாக்கம்- 101.66 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு- 101.12 டிகிரி பாரன்ஹீட், சேலம்- 101.12 டிகிரி பாரன்ஹீட், திருத்தணி- 100.4 டிகிரி பாரன்ஹீட், திருச்சி- 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ள வெதர்மேன், சென்னை கிளைமேட் குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டிற்கு இன்னொரு மோசமான நாள்.. வேலூரில் வெப்பம் மீண்டும் 40 டிகிரி செல்சியஸை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் 39Cஐ நெருங்கலாம்.
மதுரையில் சுமார் 39 டிகிரி செல்சியஸ், சேலம் சுமார் 38/39 டிகிரி செல்சியஸ், கரூர் மற்றும் ஈரோடு 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப்பம் சுமார் 38 டிகிரி செல்சியஸ் இருக்கும். நேற்று மீனம்பாக்கம் 38.7 டிகிரி செல்சியஸ் உடன் மாநிலத்தின் இரண்டாவது வெப்பமான இடமாக இருந்தது. வேலூர் 40Cஐ தொட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
மழை இருக்கா இல்லையா
தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், வெதர்மேனின் இந்த ட்வீட் பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாகவே இருக்கிறது. அதேநேரம் ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் நேற்று கூறியிருந்தார். ஆனால், மழை இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இன்னும் சில நாட்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அலர்ட்
நேற்றைய தினம் அதீத வெப்பம் தொடர்பாக மத்திய அரசும் கூட முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. வெப்ப அலை தொடர்பான நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், குளிரூட்டும் சாதனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைப்பதையும் உறுதி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது வலியுறுத்தினர்.
வானிலை மையம் சொல்வது என்ன
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications