Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்.." இரவு நேரத்தில் திடீரென வெதர்மேன் போட்ட போஸ்ட்.. டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அவரது போஸ்ட் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். வெதர்மேன் இரவு நேரம் போட்ட போட்ஸ்ட் என்ன.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!

பொதுவாகவே டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தான் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும். இந்தக் காலத்தில் கிடைக்கும் மழையைப் பொறுத்தே அடுத்தாண்டு கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பது தெரியும். இதனால் டிசம்பர் மாத கிளைமேட் சென்னைக்கு ரொம்பவே முக்கியமானது.

Tamil Nadu Weatherman Emotional Throwback Remembering 2016 Cyclone Vardah that Hit hard on Chennai

புயல்

இதே டிசம்பர் மாதம் தான் சென்னையில் புயல்களும் கூட தாக்கும். கடந்த காலங்களில் இப்படிப் பல முறை டிசம்பர் மாதம் புயல்கள் தாக்கி கனமழை கொட்டியிருக்கிறது. அப்படி சென்னையைத் தாக்கிய குறிப்பிடத்தக்கப் புயல்களில் ஒன்று வர்தா புயல். 2016ல் சென்னையைத் தாக்கிய வர்தா புயல் காரணமாகப் பாதிப்புகள் மோசமாக இருந்தது.

இந்தப் புயல் மற்ற புயல்களைப் போலக் கனமழையைக் கொடுக்கவில்லை. ஆனால், அதிவேக காற்று சென்னை நகரைப் புரட்டிப்போட்டது. கனமழையை விட இந்தக் காற்று நகரை மொத்தமாக நாசம் செய்தது. மரங்கள் சாய்வது தொடங்கி பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆனது. அந்தளவுக்குப் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

வெதர்மேன்

இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயல் எப்படித் தாக்கியது. அப்போது எந்தளவுக்கு அதிவேக காற்று வீசியது என்பது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்குக் கீழ் நெட்டிசன்கள் பலரும் தங்கள் வர்தா புயல் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

வர்தா

இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மணிக்கு 139 கிமீ காற்றோடு வர்தா புயல் சென்னையை உலுக்கியது. 1994ஆம் ஆண்டு புயலுக்குப் பிறகு, இத்தகைய தீவிரமான காற்றை சென்னை கண்டதில்லை.. அப்போது (1994), காற்று மணிக்கு 132 கிமீ வேகத்தை எட்டி இருந்தது. நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், கடந்த நூற்றாண்டில் சென்னையைக் கடந்த மிக வலிமையான புயல் 1966 நவம்பரில் ஏற்பட்டதாகும்

2015 பெருவெள்ளத்திற்குப் பிறகு, வீட்டிலேயே இருங்கள் பணிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வர்தா புயல் ஏற்பட்ட 2016 டிசம்பர் 12ம் தேதி வந்தது. அன்று வீசிய கடும் காற்றின் சத்தம் இன்றும் பலரது நினைவில் எதிரொலிக்கிறது.

அரிதான புயல்

சென்னையைத் தாக்கும் புயல்கள் அரிதாகவே மணிக்கு 120 கிமீ என்ற வேகத்தைத் தாண்டும். கடந்த 75 ஆண்டுகளில் இதுபோல மூன்று நிகழ்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னை மக்களுக்கு, 2015ஆம் ஆண்டின் பெரும் வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு, வர்தா புயல் ஒரு மறக்க முடியாத நிகழ்வானது. இயற்கை தனது முழு பலத்தைக் காட்டியது. அதேநேரம் அன்று இந்த நகரமும் மீண்டு எழுவோம் என்ற உறுதியைப் பறைசாற்றியது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+