ராமேஸ்வரத்தில் "சூப்பர் கிளவுட் பர்ஸ்ட்"!வடகிழக்கு பருவமழையில் காயல்பட்டினத்தை கவனித்தீர்களா?
சென்னை: தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வெதர்மேன் பிரதீப் ஜான் பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

ராமேஸ்வரத்தில் இந்த ஆண்டு 400 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் 900 மி.மீ. மழையும் கடந்த 2022 ஆம் ஆண்டு 400 ம.மீ. மழையும் பெய்துள்ளது. இன்றைய தினமும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
அது போல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதில் இருந்து சற்று ஓய்வு உண்டு. ராமேஸ்வரத்தில் 438 மி.மீ. , தங்கச்சிமடத்தில் 338.4 மி.மீ. மழையும் பாம்பனில் 280 மி.மீ. மழையும் மண்டபத்தில் 271.2 மீ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ராமநாதபுரத்திற்கு பிறகு நாகை மாவட்டத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அதன்படி கோடியக்கரை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் 362 மி.மீ மழை பெய்துள்ளது. இது போன்று அடர்த்தி கொண்ட மழையை எனது வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. இதை நாம் மேகவெடிப்பு என நாம் கூறக் கூடாது, இதை சூப்பர் மேகவெடிப்பு என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (நவ.21) ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications