அடுத்த 25- 30 நாட்களுக்கு.. அடுத்தடுத்து விடாமல் வரப்போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் தீவிர மழை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் திடீர் வானிலை மாற்றம் குறித்தும் வடகிழக்கு பருவமழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அவர் தனது https://tamilnaduweatherman.in/ பக்கத்தில் இது தொடர்பாக கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் , வடகிழக்கு பருவமழை போதிய மழையை கொடுக்கவில்லை. இரண்டு புயல்கள் எதிர் பக்கத்தில் சென்றதால் மழையை கொடுக்கவில்லை. ஒன்று ஏமனுக்கு சென்றது. ஒன்று வங்கதேசம் சென்றது. நவம்பர் மாதம் இந்த குறையை தீர்க்க வேண்டும். அந்த வகையில் நவம்பரில் முதல் 10 நாட்கள் சிறப்பாகவே இருந்தது.

Tamil Nadu weatherman massive heavy rainfall warning to the districts in the state

அப்படியே இருந்தாலும் வடகிழக்கு பருவமழையின் மைய பகுதிகள் இன்னும் மழையை பெறவில்லை. அந்த பகுதி டெல்டா - சென்னைதான். இங்கே போதிய மழை இல்லை. வடகிழக்கு பருவமழையை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் இங்கே மழை உருவாகும். இந்த வருடம் அப்படி எந்த மழையும் உருவாகவில்லை என்பதுதான் இங்கே மழை பெய்யாமல் போக காரணம்,

இதன் விளைவாக 01.10.2023 முதல் 13.11.2023 வரை தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் தென் மற்றும் மேற்கு தமிழ்நாடு முழுவதும் அதிக மழை பெய்துள்ளது. NEM 2023 இன் மாவட்ட வாரியான மழை அளவை13.11.2023 வரை பார்க்கலாம்

வட தமிழக மாவட்டங்கள்

சென்னை - 190 மிமீ (-61%)
திருவள்ளூர் - 142 மிமீ (-61%)
செங்கல்பட்டு - 152 மிமீ (-61%)
ராணிப்பேட்டை - 99 மிமீ (-58%)
திருவண்ணாமலை - 121 மிமீ (-54%)
கடலூர் - 175 மிமீ (-52%)
கள்ளக்குறிச்சி - 122 மிமீ (-51%)
திருப்பத்தூர் - 93 மிமீ (-49%)
காஞ்சிபுரம் - 174 மிமீ (-48%)
விழுப்புரம் - 155 மிமீ (-46%)
வேலூர் - 137 மிமீ (-40%)

பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் -40 முதல் 61% வரை மழை பெய்துள்ளது.

டெல்டா & அருகிலுள்ள மாவட்டங்கள்

அரியலூர் - 109 மிமீ (-58%)
பெரம்பலூர் - 117 மிமீ (-54%)
மயிலாடுதுறை - 216 மிமீ (-51%)
தஞ்சாவூர் - 168 மிமீ (-43%)
திருவாரூர் - 201 மிமீ (-42%)
திருச்சி - 143 மிமீ (-35%)
நாகப்பட்டினம் - 327 மிமீ (-28%)
காரைக்கால் - 372 மிமீ (-27%)
புதுக்கோட்டை - 181 மிமீ (-14%)

பெரும்பாலான டெல்டா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை -27 முதல் -58% வரை குறைந்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்கள்

கன்னியாகுமரி - 699 மிமீ (+86%)
திருநெல்வேலி - 385 மிமீ (+39%)
விருதுநகர் - 354 மிமீ (+37%)
தேனி - 335 மிமீ (+35%)
மதுரை - 343 மிமீ (+34%)
தென்காசி - 376 மிமீ (+29%)
ராமநாதபுரம் - 326 மிமீ (+11%)
சிவகங்கை - 295 மிமீ (+11%)
தூத்துக்குடி - 204 மிமீ (-20%)

தூத்துக்குடியைத் தவிர, அனைத்து மாவட்டங்களும் நல்ல மழையை பெற்று உள்ளன, மேலும் கன்னியாகுமரியில் மிக அதிக மழை பெய்துள்ளது.

மேற்கு மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்கள்

கோயம்புத்தூர் - 327 மிமீ (+35%)
ஈரோடு - 287 மிமீ (+29%)
திருப்பூர் - 222 மிமீ (+3%)
நாமக்கல் - 193 மிமீ (+1%)
நீலகிரி - 296 மிமீ (-13%)
திண்டுக்கல் - 254 மிமீ (-13%)
சேலம் - 180 மிமீ (-20%)
கரூர் - 139 மிமீ (-30%)
தருமபுரி - 156 மிமீ (-31%)
கிருஷ்ணகிரி - 95 மிமீ (-55%)

மேற்குத் தமிழ்நாட்டில் கலவையான மழை பெய்துள்ளது.

மழை பெய்யுமா?:

தற்போது MJO நிலை 1 ல் இருந்து மழைக்கு சாதகமான நிலை 2க்கு செல்ல உள்ளது. நவம்பர் 2ம் தேதி இது நகரும். டிசம்பர் 2ம் வாரம் வரை இருக்கும். இதனால் அடுத்த 25- 30 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து உருவாகிக்கொண்டே இருக்கும் . இந்த காலத்தில் சென்னை - நாகை கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த 30 நாட்கள் மழை மிக ஆக்டிவாக இருக்கும். டிசம்பர் 2 வரை மழை தொடரும்.,

இது போக இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும். சில பகுதிகளில் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தீவிர மழை பெய்யக்கூடும். நாகை முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் முழுவதும் தீவிர மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகள்தான் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகிறது. இங்கே மழை இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.,

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி , கடலூர், விழுப்புரம் கடற்கரை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் கடற்கரை ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய மாவட்டம். 13-ம் தேதி இரவு கடலூர்-நாகை-சென்னை பெல்ட்டில் மழை தொடங்கி நவம்பர் 14-ம் தேதிக்குள் மழையின் தீவிரம் அதிகரிக்கும். சென்னையில் 14-ந்தேதி கனமழை முதல் மிக கனமழை மற்றும் நவம்பர் 15-ம் தேதி கனமழை பெய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+