சென்னையில் இந்த பகுதியில் ஆபிஸ் இருக்கா? வீட்டுக்கு வரும் போது டமால் டுமீல் மழை! வெதர்மேன் அப்டேட்
சென்னை: வட சென்னை மற்றும் மத்திய சென்னைக்குள்பட்ட பகுதிகளில் கும்மிருட்டாக இருப்பதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் டமால் டுமீல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் தினமும் எங்காவது இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கூட வடசென்னை பகுதிகளுக்கு மேக கூட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

பாரிமுனை பகுதிகளில் எல்லாம் கும்மிருட்டாக இருக்கிறது. வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது டமால் டுமீல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் வெயில் இருந்து கொண்டே மழையும் பெய்கிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்றைய தினமும் மாலை லேசான வெயில் இருந்த போதே கனமழை பெய்தது. முகப்பேர், கோயம்பேடு, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 11ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் 12ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
14ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் தருமபுரி உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அது போல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சேவூர், ஆதனூர், ராட்டிணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications