சென்னையை துவட்டிய மழை.. குளிர்ந்த மீனா-நுங்கா! இன்னும் 10 நாள் வேற..தமிழ்நாடு வெதர்மேன் குட் நியூஸ்!
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2 நாட்களைப் போல நேற்றும் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் ஜூன் மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் வழக்கத்தைவிட 4-5 மடங்கு அதிக மழை பெய்து இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தி வந்தது பகல் நேரங்களில் அடுப்பை பற்ற வைத்தது போல சென்னை சூடாக இருந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதை அடுத்து மே மாதத்தின் நடுப்பகுதியில் கோடை மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து மே இறுதிப் பகுதிகளில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சொன்னது போலவே சென்னையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு தொடங்கிய மழை பத்தரை மணி வரை நீடித்தது. இடைவிடாமல் வெளுத்து வாங்கிய மழை காரணமாக சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணா நகர், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி, அனகாபுத்தூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் வெயில் அடித்த நிலையில் இரவில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பலர் சாலையோர கடைகளில் தஞ்சம் புகுந்தனர். கனமழை காரணமாக சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்," ஒரு மணி நேரத்தில் என்னவொரு மழை. நேற்று சென்னையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்றால், இன்று மத்திய மற்றும் வடசென்னையில் வெளுத்து வாங்குகிறது. திருவொற்றியூரில் 85 மி.மீ, அமிஞ்சிகரை - 65 மி.மீ, தேனாம்பேட்டை - 62, மணலி - 60, கொளத்தூர் - 60. நாளை மீண்டும் சந்திப்போம். மிதமான மழையும் சாரலும் தொடரும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் வழக்கத்தைவிட 4-5 மடங்கு அதிக மழை பெய்து இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," மீனாம்பாக்கத்தில் - 241.4 மி.மீ , நுங்காம்பாக்கத்தில் 189. 8 மி.மீ மழை பெய்துள்ளது.
ஜூன் மாதத்தில் சாதாரணமாக 55-60 மி.மீ மழை பெய்யும், ஆனால் ஜூன் மாதம் நிறைவடைய இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், சராசரி மழையை விட கிட்டத்தட்ட 4-5 மடங்கு மழை பெய்கிறது இந்த ஜுன் மாதம் சென்னைக்கு மிக அருமையான மாதம். இன்று இரவும் மீண்டும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்" என கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications